• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

AI உங்கள் வேலையை பறிக்குமா? ஐஐடி மெட்ராஸின் புதிய ஆய்வறிக்கை சொல்வது என்ன? | Will AI Take Your Job? IIT Madras Report Explains Who Faces the Biggest Risk

GenevaTimes by GenevaTimes
October 26, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
AI உங்கள் வேலையை பறிக்குமா? ஐஐடி மெட்ராஸின் புதிய ஆய்வறிக்கை சொல்வது என்ன? | Will AI Take Your Job? IIT Madras Report Explains Who Faces the Biggest Risk
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


AI உங்கள் வேலையை பறிக்குமா? ஐஐடி மெட்ராஸின் புதிய ஆய்வறிக்கை சொல்வது என்ன?

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் வேலையை முழுமையாக பறித்துவிடுமா என்ற அச்சம் உலகெங்கும் நிலவி வரும் சூழலில், ஐஐடி மெட்ராஸ் இதுகுறித்து ஒரு விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஐஐடி மெட்ராஸ் சார்பாக How AI Is Reconfiguring Work in India என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஏஐ தொழில்நுட்பத்தால் மனிதர்களின் ஒட்டுமொத்த வேலைகளும் காணாமல் போய்விடாது என கூறியுள்ளது. பெரும்பாலான வேலைகள் பல வகையான பணிகளால் (Tasks) ஆனவை, அதில் சில பணிகளை மட்டுமே ஏஐ-ஆல் செய்ய முடியும் எனவே முழுமையாக ஒரு மனிதன் செய்யும் வேலையை ஏஐ-ஆல் செய்ய முடியாது என கூறியுள்ளது.

AI உங்கள் வேலையை பறிக்குமா? ஐஐடி மெட்ராஸின் புதிய ஆய்வறிக்கை சொல்வது என்ன?

உதாரணமாக சென்னை போன்ற நகரங்களில் உள்ள BPO மையங்களில் Password reset, கணக்கு இருப்பு விவரங்கள் அல்லது மருத்துவர் சந்திப்பு பதிவு போன்ற எளிய மற்றும் வழக்கமான கேள்விகளுக்கு Voice bots மூலமாகவே தீர்வு காணப்பட்டு விடலாம். ஆனால் சிக்கலான பிரச்சனைகளுடன் மற்றும் கோபமாக வரும் வாடிக்கையாளர்களை கையாள மனிதர்கள் தான் தேவை என சுட்டிக்காட்டியுள்ளது.

நம் வேலைகளில் ஏஐ எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இரண்டு வகைகளாக பிரித்துள்ளனர். முதல் வகையில் ஏஐ பெரும்பாலான வழக்கமான பணிகளை செய்துவிடும்; மனிதர்கள் அதன் முடிவுகளை சரிபார்ப்பார்கள் அல்லது விதிவிலக்கான சிக்கலான வழிகளை கையாளுவார்கள். இரண்டாம் வகையில் மனிதர்களே பிரதான பணிகளில் பொறுப்பு வகிப்பார்கள், ஏஐ அவர்களுக்கு உற்பத்தி திறனை அதிகரிக்கும் கருவியாக மட்டுமே செயல்படும் என கூறியுள்ளது.

இந்த ஆய்வறிக்கை எழுப்பும் மிக முக்கியமான கவலை ஏஐ தொடக்க நிலை மற்றும் இளநிலை பணியாளர்களை பாதிக்கும் என்பது தான். பொதுவாக, இளநிலை ஊழியர்கள் ஆரம்பத்தில் எளிய, திரும்ப திரும்ப செய்யக்கூடிய பணிகளை செய்வதன் மூலமே நிறுவனத்தின் செயல்முறைகளை கற்றுக்கொள்கிறார்கள். பிற்காலத்தில் மூத்த நிலை அதிகாரிகளாக மாறுவதற்கு தேவையான அனுபவமும் இந்த ஆரம்ப கால பயிற்சிகளில்தான் கிடைக்கின்றன. ஆனால் ஏஐ இந்த எளிய பணிகளை முழுமையாக எடுத்துக்கொள்வதால், இளநிலை ஊழியர்கள் அனுபவத்தை பெறும் வாய்ப்பை இழக்க நேரிடும். இதனால் நிறுவனங்கள் தங்களது பயிற்சி முறைகளை மாற்றி அமைக்க வேண்டியிருக்கும் என கூறியுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்திற்கும் சமூகத்திற்கும் ஏஐ பயனுள்ளதாக இருப்பதை உறுதி செய்ய மலிவு விலை ஏஐ கருவிகளை, குறிப்பாக சிறு வணிகங்களிடையே ஊக்குவிக்க வேண்டும். ஏஐ-ஆல் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு சரியான மாற்று பணிகளுக்கான திறன்களை வழங்குவதுடன், அதற்கான மறுபயிற்சி செலவுகளை ஏற்பது யார் என்பதில் தெளிவு இருக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளை முழுமையாக பறிக்காது, ஆனால் வேலையை தக்க வைக்க ஏஐ குறித்து கற்று கொள்ள வேண்டும் என கூறியுள்ள ஐஐடி மெட்ரோல், ஏஐ இனி நாம் வேலை செய்யும் முறையை மாற்றியமைக்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக செயல்படும் என குறிப்பிடுகிறது.

Share This Article

English summary

Will AI Take Your Job? IIT Madras Report Explains Who Faces the Biggest Risk

AI உங்கள் வேலையை பறிக்குமா? ஐஐடி மெட்ராஸின் புதிய ஆய்வு அறிக்கை சொல்வது என்ன? / Artificial intelligence may reshape jobs rather than eliminate entire roles, according to IIT Madras’s “How AI Is Reconfiguring Work in India” report.

Story first published: Monday, October 26, 2026, 17:05 [IST]

Read More

Previous Post

சீனா கட்டும் ராட்சத அணை.. பதிலடியாக இந்தியா செய்யும் தரமான சம்பவம்! என்ன தான் நடக்கிறது? | India is Planning a 11,200 MW Siang Mega Dam to counter China Massive dam, Why its important

Next Post

அமெரிக்கா – ஈரான் போர்: 2027-லும் உலகை அச்சுறுத்தும் எரிசக்தி நெருக்கடி

Next Post
அமெரிக்கா – ஈரான் போர்: 2027-லும் உலகை அச்சுறுத்தும் எரிசக்தி நெருக்கடி

அமெரிக்கா - ஈரான் போர்: 2027-லும் உலகை அச்சுறுத்தும் எரிசக்தி நெருக்கடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin