Last Updated:
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வரும் அச்சுறுத்தலின் தன்மை முன்னெப்போதும் இல்லாதது என்றும், இதற்கு மிக உயர்ந்த அளவிலான விழிப்புணர்வு அவசியம் என்றும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படும் அச்சுறுத்தலில் இருந்து வாடிக்கையாளர்களின் தரவுகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு வங்கிகளுக்கு மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் நாட்டின் முன்னணி வங்கிகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வரும் அச்சுறுத்தலின் தன்மை முன்னெப்போதும் இல்லாதது என்றும், இதற்கு மிக உயர்ந்த அளவிலான விழிப்புணர்வு அவசியம் என்றும் வலியுறுத்தினார். மேலும், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பு தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
Union Minister for Finance and Corporate Affairs Smt. @nsitharaman today chaired a high-level meeting, along with Union Minister for Electronics and Information Technology, Railways and I&B Shri @AshwiniVaishnaw, with Scheduled Commercial Banks and key stakeholders to assess the… pic.twitter.com/TrQrDCkMKE
— Ministry of Finance (@FinMinIndia) April 23, 2026
எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் விரைவாகவும் திறம்படவும் பதிலளிக்க, ஒருங்கிணைந்த வழிமுறையை உருவாக்குமாறு இந்தியன் வங்கிகள் சங்கத்திற்கு அறிவுறுத்திய நிதியமைச்சர், வங்கிகளின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத் திறன்களைத் தொடர்ந்து வலுப்படுத்த, சிறந்த சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் சிறப்பு ஏஜென்சிகளை ஈடுபடுத்தவும் வங்கிகளை கேட்டுக் கொண்டார்.
Delhi,Delhi,Delhi
Apr 24, 2026 12:52 PM IST
AI அச்சுறுத்தல் : “வங்கி வாடிக்கையாளர்களின் தரவுகளை பாதுகாக்க வேண்டும்” – வங்கிகளுக்கு மத்திய நிதித்துறை அறிவுறுத்தல்


