தொழிலதிபர் கெளதம் அதானி மீது அடிக்கடி புகார்கள் வந்தாலும் அவை ஓரிரு நாளில் காணாமல் போய்விடுவது வழக்கமாக இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அடிக்கடி அதானி மீது புகார்கள் கூறினாலும் அவை எடுபடாமல் போய்விடுகிறது.
இந்தியா முழுவதும் அதானி நிறுவனம் சோலார் மின் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களைப் பெறுவதற்காக அதானி நிறுவனம் அதிகாரிகளுக்குக் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்திருப்பதாக அமெரிக்கா வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டி இருக்கின்றனர்.
இது தொடர்பாக அமெரிக்க வழக்கறிஞர்கள் அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதானியும், அவரது உறவினர் சாகர் அதானி உட்பட மொத்தம் 8 பேர் சேர்ந்து, இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர் அளவுக்கு லஞ்சம் கொடுத்து சோலார் மின் திட்டங்களைப் பெற்று இருக்கின்றனர்.

