அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா நீதிமன்றத்தின் குற்றப்பத்திரிகையில் கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் அதானி குழுமத்தின் முக்கிய நிர்வாகி வினீத் ஜெயின் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் சாட்டப்படவில்லை என்று மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முகுல் ரோஹத்கி, “நான் ஒரு வழக்கறிஞர். அதனால், அதானி குழுமம் சார்ந்த பல வழக்குகளில் ஆஜாராகி உள்ளேன். ஆனால், இவை அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட பார்வையே. நான் அதானி குழுமம் சார்ப்பாக இவற்றை பேசவில்லை.

