ஷிவமொகா : ஷிவமொகாவில் நேற்று காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தவரை தாக்கிய கரடியை, மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
ஷிவமொகா நகரின் சாந்தவேரி கோபால கவுடா லே – அவுட்டில் டி.வி.ஜி., பூங்கா அமைந்து உள்ளது. நேற்று காலை பலர் இங்கு நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பகுதியில் திடீரென வந்த கரடியை, அங்கிருந்த நாய்கள் விரட்டின. அந்த கரடி தப்பி ஓடியபோது, பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த துக்கா ராமை தாக்கிவிட்டுச் சென்றது.
இது தொடர்பாக வனத்துறையினருக்கு, அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அதிகாரிகள், கரடி பதுங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.
பின், ‘ஷார்ப் ஷுட்டர்’ டாக்டர் வினய், துப்பாக்கியால் கரடிக்கு மயக்க மருந்து அடங்கிய ஊசியை சுட்டார். ஆனால் குறி தப்பியது. இரண்டாவது முறையாக மீண்டும் சுட்டதில், மயக்க ஊசி கரடி மீது பாய்ந்து மயக்கம் அடைந்தது.
பின், வலையால் பிடித்து, கூண்டில் ஏற்றினர். பிடிபட்ட ஆண் கரடிக்கு 6 முதல் 7 வயது இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement