சிங்கப்பூரில் உள்ள ஒரு பிளாட்டின் கீழ்தளத்தில் ஓய்வெடுத்த வெளிநாட்டு ஊழியர்களை வீடியோ பிடித்த நபர் ஒருவர், அதை இணையத்தில் பதிவேற்றி அவர்களை கடுமையாக விமர்சித்தார்.
Singaporeinfluenceviral என்ற டிக்டாக் பக்கம் பகிர்ந்த இந்த காணொளியில், பிளாட்டின் கீழ்தளத்தில் குறைந்தது மூன்று வெளிநாட்டு ஊழியர்கள் தரையில் பாய்களில் அமர்ந்திருப்பதையோ அல்லது படுத்திருப்பதையோ காணமுடிந்தது.
அவர்களை வீடியோ எடுக்கும் நபர் ஒருவர் ஊழியர்களிடம் சென்று, “உள்ளே புகைபிடிக்க அனுமதி இல்லை” என்று கூறுகிறார்.
அதோடு விடாமல், “உங்களை இங்கு தூங்க அனுமதித்தது யார்..?” என்று அவர்களை நோக்கி அவர் திரும்பத் திரும்பக் கேள்வி எழுப்பினார்.
“இது உங்கள் தாத்தாவின் இடம் இல்லை, சரியா” என்றும் அவர் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி ஊழியர்களை காயப்படுத்தினார்.
தொடர்ந்து அவர் பேசிக்கொண்டே இருந்த நிலையில், கீழே அமர்ந்திருக்கும் ஊழியர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர்.
டோட்டோ டிரா லாட்டரி: மீண்டும் முதல் பரிசு S$10 மில்லியன் – வெல்லப்போவது யார்?
இறுதியாக, “உங்கள் அனைவராலும் எந்த பயனும் இல்லை,” என்று கடும் வார்த்தைகளை பயன்படுத்திய அந்த நபர் அங்கிருந்து சென்றார்.
“பிஷான்-தோ பாயோ டவுன் கவுன்சில் இவர்களை எப்படி தூங்க அனுமதித்தது” என்ற தலைப்பில் அந்த வீடியோ வெளியானது.
மேலும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் இடமில்லாமல் இருக்கிறார்களா அல்லது ஓய்வெடுக்க சரியான இடம் இல்லையா என்று கேள்வியும் அதில் கேட்கப்பட்டது.
இது குறித்து தி நியூ பேப்பரிடம் பேசிய வெளிநாட்டு ஊழியர் தொண்டு அமைப்பான ‘ItsRainingRaincoats’ நிறுவனர் தீபா சுவாமிநாதன், அந்த காணொளியால் தாம் மிகவும் வருத்தமடைந்ததாகக் கூறினார்.
சிங்கப்பூரில் பதுங்கி இருந்த திருவாரூர் நபர் இந்தியா சென்றபோது கைது
அந்த நபர் இப்படி “முரட்டுத்தனமாக நடந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதே ஊழியர்கள் தான் அந்த கீழ்த் தளங்களைக் கட்டியவர்கள். வேறு எங்கு அவர்கள் ஓய்வெடுக்கச் செல்ல வேண்டும்?” என்று திருமதி. தீபா கேட்டார்.
வெளிநாட்டு ஊழியர்கள் பெரும்பாலும் நீண்ட நேர வேலையை சகித்துக்கொண்டு பார்ப்பவர்கள், இதன் காரணமாக அவர்கள் சற்று ஓய்வு முக்கியம் என்பதை திருமதி சுவாமிநாதன் சுட்டிக்காட்டினார்.
“ஆனால் அவர்கள் ஓய்வெடுக்கும் அந்த நேரத்தில் கூட, எப்படி புண்படுத்தப்படுகிறார்கள்,” என்று அவர் கவலையுடன் கூறினார்.
இதனால் வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வு இடங்களை உருவாக்குவதற்கான அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டின் முக்கிய நகரில் இருந்து சிங்கப்பூருக்கான நேரடி விமான சேவை நிறுத்தம்
பல இணையவாசிகள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை பதிவிட்டனர்.
அந்த நபரின் மோசமான நடத்தையை “துன்புறுத்தல்” என்று குறிப்பிட்டு இணையவாசிகள் கருத்து கூறினர்.
இதுபோன்ற ஓய்வெடுக்கும் சூழ்நிலைகள் பொதுவானவை என்று கூறிய பலர் “ஊழியர்கள் கீழ் தளத்தில் ஓய்வெடுப்பதில் எந்தத் தவறும் இல்லை” என்று குறிப்பிட்டனர்.
“சட்டவிரோதமாக ஏதும் நடக்காத வரை, அது பொதுவான இடம்” என்று ஒருவர் கருத்து கூறினார்.
“அவர்களிடம் (ஊழியர்களிடம்) கருணை காட்டுவோம்,” என்று ஒருவர் கூறினார்.
“அங்கு ஓய்வெடுக்க அவர்கள் தான் தகுதியானவர்கள் என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்வோம் என நான் நினைக்கிறேன்” என்றும் குறிப்பிட்டு வெளிநாட்டு ஊழியர்கள் பக்கம் பலர் நின்றனர்.

