இதுகுறித்து சதுரங்க நிபுணர் லெவி ரோஸ்மேன் யூடியூப் வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார். அதாவது “இதன் பின்னனியில் உள்ள முழுமையான தகவல் உங்களுக்கு தெரியவில்லை என்றால், அவர் செய்தது கரணமில்லாத செயலாக தோன்றும். ஆனால் உண்மை என்னவென்றால், இப்படி செய்யுமாறு போட்டி ஏற்பாட்டாளர்கள் தான் எங்களிடம் கூறினார்கள். செஸ்பேஸ் போட்டியில், இந்தியாவின் சாகர் ஷாவுக்கு எதிரான ஆட்டத்தில் நான் வென்றாலோ அல்லது அவர் வென்றாலோ, நாங்கள் ராஜா காயை உடைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள். நான் அந்த சமயத்தில் மறந்துவிட்டேன். இப்படி செய்வது வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே” என்றார்.


