செம்பவாங் பூங்காவிற்கு அருகிலுள்ள நீரில் மிதந்த 23 வயதுமிக்க இளைஞர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது.
நேற்று (அக்டோபர் 20) திங்கட்கிழமை பிற்பகல் 2:20 மணியளவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வெளிநாட்டு ஊழியர்களின் கடின உழைப்புக்கு தீபாவளி சிறப்பு விருந்து மற்றும் விருதுகள்!
கம்போங் வாக் ஹாசனில் பிற்பகல் 2:30 மணியளவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.
கரைக்கு அருகே மிதந்த உடல் மீட்டு வெளியே கொண்டுவரப்பட்டது. பின்னர் உடலை சோதித்த SCDF துணை மருத்துவர்கள் குழு ஆடவர் இறந்துவிட்டதாக சம்பவ இடத்திலேயே உறுதி செய்தனர்.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இதில் சதி வேலை ஏதும் நடந்ததாக சந்தேகம் இல்லை என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அவர் யார் என்ற விவரம் வெளியாகவில்லை.
இரு லாரிகள் மோதல்: வெளிநாட்டு ஊழியர்களுக்கு எலும்பு முறிவுகள், சிராய்ப்பு… 21 பேர் பாதிப்பு
சிங்கப்பூரில் பதுங்கி இருந்த திருவாரூர் நபர் இந்தியா சென்றபோது கைது