அமைச்சரவையில் இன்று வெள்ளிக்கிழமை (10) புதிய மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
புதிதாக 03 அமைச்சர்களும் 10 பிரதியமைச்சர்களும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுக்கொண்டுள்ளனர்.
2026 வரவு – செலவுத் திட்டத்துடன் இணைந்த தேசிய வளர்ச்சி இலக்குகளின் செயல்திறனை விரைவுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, அரசாங்கம் அமைச்சரவையில் மறு சீரமைப்பை மேற்கொண்டுள்ளது.
புதிய அமைச்சரவை விவரங்கள் இதோ…
01. பிமல் நிரோஷன் ரத்நாயக்க – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்
02. அனுர கருணாதிலக – துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்
03. வைத்தியர் எச்.எம். சுசில் ரணசிங்க – வீடமைப்பு , நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்
பிரதி அமைச்சர்கள்
01. கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ – நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர்
02. டி.பி. சரத் – வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதியமைச்சர்
03. எம்.எம். மொஹமட் முனீர் – சமய மற்றும் கலாசார விவகார பிரதியமைச்சர்
04. எரங்க குணசேகர – நகர அபிவிருத்தி பிரதியமைச்சர்
05. வைத்தியர் முதித ஹங்சக விஜயமுனி – சுகாதார பிரதியமைச்சர்
06. அரவிந்த செனரத் விதாரண – காணி மற்றும் நீர்ப்பாசன பிரதியமைச்சர்
07. எச்.எம். தினிது சமன் குமார – இளைஞர் விவகார பிரதியமைச்சர்
08. யு.டி. நிஷாந்த ஜயவீர – பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர்
09. கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன – வெகுஜன ஊடக பிரதியமைச்சர்
10. எம். எம். ஐ. அர்கம் – வலுசக்தி பிரதியமைச்சர்