Last Updated:
இந்திய அணி வெற்றிபெற இன்னும் 58 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெல்லியில் நடைபெற்று வரும் 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 121 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் கடந்த10ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 518 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்களில் ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் ஆனது. 2 ஆவது இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணியின் தொடக்க வீரர் ஜான் கேம்ப்பல் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோர் சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கேம்ப்பல் 115 ரன்களும், ஹோப் 103 ரன்களும் எடுத்தனர்.
கேப்டன் ரோஸ்டன் சேஸ் 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஜஸ்டின் க்ரீவ்ஸ் 50 ரன்கள் எடுக்க 118.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 390 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இந்திய அணி வெற்றிபெற 121 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து 2ஆவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி தொடக்கத்திலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட்டை இழந்தது. 8 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் ஆட்டமிழந்தார்.
October 13, 2025 5:35 PM IST
IND vs WI : வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட்.. வெற்றியை நெருங்கும் இந்திய அணி..