மேலும், PMKISAN திட்டத்தின் கீழ் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 பெற்று வரக்கூடிய விவசாயிகள், இத்திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற கட்டாயமாக தனித்துவ விவசாய அடையாள அட்டை எண் பெற்றிருக்க வேண்டும். எனவே, PMKISAN திட்ட பயனாளிகள் உடனடியாக தங்களின் நில உடைமை விபரங்களை வேளாண்மை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு பதிவு மேற்கொண்டு, பயன்பெறலாம்.