Last Updated:
ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் முதல் போட்டியைப் போன்றே முதலாவது மற்றும் மூன்றாவது இடத்தில் களமிறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 ஆவதுபோட்டி வரும் வியாழன் அன்று நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ள நிலையில் 2 ஆவது போட்டியில் வெற்றிபெற்று கம்பேக் கொடுக்குமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
பெர்த் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.
இதனைத் தொடர்ந்து, இரண்டாவது ஒரு நாள் போட்டி, அடிலெய்டு மைதானத்தில் வரும் வியாழக்கிழமை நடைபெறுகிறது. கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில் இந்திய அணி களமிறங்குகிறது.
முதல் போட்டியில் நீக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ், இரண்டாவது போட்டியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்காக, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோரில் ஒருவர் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.
October 20, 2025 8:54 PM IST