Last Updated:
இந்தியா ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் கொள்முதல் செய்தால் மிகப்பெரிய வரிச் செலுத்த வேண்டியிருக்கும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினால், இந்திய இறக்குமதி பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்தியா ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு மறைமுகமாக நிதியளிப்பதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டுகிறார்.
மேலும் ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தப்போவதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் தனிப்பட்ட முறையில் உறுதியளித்ததாக டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். ஆனால், இதுதொடர்பாக எந்தவித உரையாடலும் நடக்கவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் எரிசக்தி கொள்கை அதன் நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டது என்றும் இந்திய வெளியுறவுத்துறை இந்த விவகாரத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் நிலைபாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், இந்தியா ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் கொள்முதல் செய்தால் மிகப்பெரிய வரிச் செலுத்த வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார்.
டிரம்ப் நிர்வாகம் ஏற்கனவே இந்தியப் பொருட்கள் மீது 25 சதவிகிதம் வரியும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக 5 சதவிகிதம் வரியும் விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
October 20, 2025 6:58 PM IST
இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிக்கப்படும் – ரஷ்யா எண்ணெய் விவகாரத்தில் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை