முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தங்கள் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட வாகனங்களைத் திருப்பித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியுள்ளார்.
அரசாங்கத்துக்கு வாகனங்களை வழங்குவதன் மூலம் அவர்களின் பாதுகாப்புக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், வாகனங்களைத் திருப்பித் தர வாய்ப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் கோரிக்கையானது பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள பாதுகாப்பு மறுஆய்வுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் முடிவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.