Last Updated:
ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சி பிஹார் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
பீகார் சட்டமன்ற தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
243 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ள பீகாரில் சட்டமன்ற தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குகள் நவம்பர் 14 ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.
இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இரண்டாவது கட்டமாக 122 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. இருப்பினும், இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு செய்வதில் அவ்வப்போது பிரச்சனைகள் எழுந்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 17ஆம் தேதி காங்கிரஸ் கட்சி தனது இரண்டாவது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்திருந்தது. இன்னொரு பக்கம் பாஜக, ஐக்கிய ஜனதா கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இத்தகைய சூழலில் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தரப்பிலிருந்து 123 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் மகன், எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ரகோபூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து போட்டியிட உள்ளார்.
October 20, 2025 2:54 PM IST