Last Updated:
இந்திய அணி வெற்றி பெற்றிருப்பதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது
இந்தியாவுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இழந்த போதிலும், பாசிட்டிவான சில விஷயங்கள் நடந்திருப்பதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோஸ்டன் சேஸ் கூறியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. முதல் போட்டி அகமதாபாத்தில் நடந்த போது, அதில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி டெல்லியில் கடந்த 10ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி முழுமையாக இந்தியாவிடம் சரண்டர் அடைந்தாலும், இரண்டாவது டெஸ்டில் ஓரளவு வெற்றி பெற போராடியது. இதனால் ஆட்டம் 5ஆம் நாள் வரை சென்றது. குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணியின் 2 பேட்ஸ்மேன்கள் சதம் அடித்து பாராட்டைப் பெற்றனர்.
2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் இந்தியா உடனான தொடரை இழந்த பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோஸ்டன் கூறியதாவது:
“முதல் போட்டி எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. ஏனென்றால் அதில் இன்னிங்ஸ் தோல்வியை நாங்கள் அடைந்திருந்தோம். அதில் கற்றுக் கொண்ட பாடங்களை இரண்டாவது டெஸ்டில் செயல்படுத்தி சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தினோம்.
எங்களது அணியில் கேம்பல் மற்றும் சாய் ஹோப் பாசிட்டிவாக விளையாடி அணிக்கு நம்பிக்கையை அளித்தனர். டெஸ்ட் போட்டியில் நாங்கள் பேட்டிங்கில் 100 ஓவர்களை கடந்து விளையாடி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் இந்த முறை வலுவான இந்திய அணிக்கு எதிராக நாங்கள் 100 ஓவர்கள் வரை கடந்து விளையாடி உள்ளோம்.
October 14, 2025 10:13 PM IST