Last Updated:
தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராணுவ வீரர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், ராணுவ வீரர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் பகிர்ந்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்த வகையில், ஜம்மு காஷ்மீரின் தங்தார் பகுதியில் ராணுவ வீரர்கள் உற்சாகமாக நடனமாடி, பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினர்.
சண்டிகரில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சிறப்பு பஜனையில் செய்தனர். அதேபோல, பஞ்சாபின் அமிர்தசரஸ், ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதிகளில் பி.எஸ்.எஃப். வீரர்கள் பஜனையில் ஈடுபட்டனர்.
இதனிடையே, ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, புத்தரின் புனித நினைவு சின்னங்களுடன் ரஷ்யாவில் இருந்து இந்தியா திரும்பினார். முன்னதாக, கல்மிகியாவில் நடைபெற்ற புத்த கண்காட்சியில் இந்தியாவின் புத்த நினைவு சின்னம் காட்சிப்படுத்தப்பட்டது.
October 20, 2025 7:48 AM IST