சென்னை,இந்திய சினிமா உலகில் தற்போது பான் இந்தியா அளவில் பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கும் நட்சத்திரங்கள் ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் சில நட்சத்திர ஹீரோக்கள் ரூ.100 கோடி முதல் ரூ.150 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள். அதேபோல், இன்னும் சிலர் படத்தின் லாபத்தில் பங்குகளை வாங்குகிறார்கள். ஒரு படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானால், அவர்கள் தங்கள் சம்பளத்தை உயர்த்துகிறார்கள்.
ஆனால், இப்போதுள்ள ஹீரோக்களின் சம்பளத்துடன் ஒப்பிடும்போது, 80கள் மற்றும் 90களில், ஹீரோக்கள் வாங்கிய சம்பளம் மிகக் குறைவு. அந்தக் காலத்தில், பெரிய நடிகர்களின் சம்பளம் கூட லட்சங்களில்தான் இருந்தது.
இப்படி இருக்கையில், முதல் முறையாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய ஹீரோ யார் என்பது உங்களுக்கு தெரியுமா? அவர் வேறு யாருமல்ல. சிரஞ்சீவிதான். தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான சிரஞ்சீவி, ஒரு காலத்தில், அமிதாப் பச்சன் உள்பட அனைத்து பிரபல நடிகர்களையும் சம்பளத்தில் முந்தினார். பாலிவுட் உலகை ஆளும் அமிதாப்புக்கு முன்பே ஒரு கோடி சம்பளம் வாங்கி சாதனை படைத்தார்.
ஆபத்பந்தவுடு (1992) என்ற படத்திற்காக, சிரஞ்சீவி ரூ.1.25 கோடி சம்பளம் வாங்கினார்.