Last Updated:
டெல்லியில் 7 ஆண்டுகளுக்கு பிறகு பசுமை பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் 7 ஆண்டுகளுக்கு பிறகு பசுமை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தலைநகரில் வசிப்போர் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
டெல்லியில் காற்று மாசு காரணமாக, கடந்த 2018 ஆம் ஆண்டு முதல், பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, டெல்லியில் பசுமை பட்டாசுகள் வெடிக்கவும், விற்கவும் அனுமதி வழங்கப்பட்டது.
அதாவது, தீபாவளிக்கு ஒரு நாள் முன்பாகவும், தீபாவளி அன்றும், காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் வசிப்போர் 7 ஆண்டுகளுக்கு பிறகு பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் விதிகளை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால், காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டும் என அஞ்சப்படுகிறது.
October 19, 2025 4:27 PM IST
7 ஆண்டுகளுக்கு பிறகு பசுமை பட்டாசு வெடிக்க அனுமதி.. டெல்லியில் மக்கள் உற்சாகம்.. ஆனால் புதிய அச்சம்!