Last Updated:
டொனால்ட் டிரம்ப் நிர்வாக கொள்கைகளுக்கு எதிராக NO KINGS பேரணியில் 2500க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடைபெற்றது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக ஏராளமானோர் ஒன்று கூடி போராட்டம் நடத்தியுள்ளனர்.
அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டிரம்பின் நிர்வாக கொள்கைகளுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குடியேற்றக் கொள்கை, பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைப்பு, காஸா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அவருக்கு எதிராக பலரும் போர்க்கொடி தூக்கி வரும் நிலையில், அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் போராட்டம் நடைபெற்றது.
நியூயார்க்கில் திரண்ட ஆயிரக்கணக்கானோர், டிரம்பின் சர்வாதிகாரப் போக்கை கண்டிப்பதாக பதாகைகளை ஏந்தி பேரணியாகச் சென்றனர். NO KINGS எனும் பெயரில் அமெரிக்கா முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட பேரணிகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாஷிங்டனில் பாதுகாப்பு பணியை ராணுவத்திற்கு ஒப்படைத்ததற்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் கண்டன குரல் எழுப்பினர். Boston, Toronto என அமெரிக்காவில் சிறு நகரங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை எங்கும் பார்த்தாலும் டிரம்பிற்கு எதிரான குரல் ஓங்கி ஒலித்தது.
இதனிடையே, காஸாவில் எஞ்சிய பிணைக்கைதிகளின் உடல்களை மீட்டுத் தர அதிபர் டிரம்ப் உதவ வேண்டும் எனக் கோரி, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் பலர் ஒன்றுகூடி போராடினர்.
October 19, 2025 2:59 PM IST
அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாக கொள்கைகளுக்கு எதிர்ப்பு.. அமெரிக்காவில் பெரும் போராட்டம்