“புகழ்பெற்ற இந்திய வம்சாவளி வெளியுறவுக் கொள்கை நிபுணரும் பாதுகாப்பு மூலோபாய நிபுணருமான ஆஷ்லே ஜே டெல்லிஸ் தேசிய பாதுகாப்புத் தொடர்பான ரகசிய தகவல்களை சட்டவிரோதமாக தக்கவைத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்” என்று வர்ஜீனியா கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆஷ்லே ஜே டெல்லிஸ், சர்வதேச அமைதிக்கான கார்னகி அறக்கட்டளை என்ற உலகளாவிய ஆய்வு நிறுவனத்தில், டாடாவின் மூலோபாய விவகாரங்களுக்கான தலைவராவார் (Tata Chair for Strategic Affairs).
`கார்னகி அறக்கட்டளை” உலக அரசியல், பாதுகாப்பு, அமைதி மற்றும் சர்வதேச உறவுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் (Think Tank) நிறுவனமாகும்.