ஆனால் இலக்கு மற்றும் வயது என்பது முற்றிலும் குறிப்பிட்ட அந்த நபரை பொறுத்தது. ஏனெனில் இது நபருக்கு நபர் மாறுபடலாம். ஆனால் பெரும்பாலானவர்களுடைய மனதில் வரக்கூடிய ஒரு இலக்கு ஒரு கோடி ரூபாய். ஒருவருடைய வாழ்க்கையை சமாளிப்பதற்கு இந்த தொகை போதுமானது என்ற எண்ணம் பெரும்பாலானவர்களுடைய மனதில் உள்ளது. அதிலும் குறிப்பாக மிடில் கிளாஸ் நபர்களுக்கு இது பொருளாதார பாதுகாப்பை வழங்குவதற்கு போதுமானது.
ஆனால் அடுத்ததாக வரக்கூடிய கேள்வி இவ்வளவு பெரிய தொகையை சேர்ப்பதற்கு ஒருவர் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணத்தை சேமிக்க வேண்டும் என்பதே. மாதம் 10,000 ரூபாய் முதலீடு செய்வதன் மூலமாக அடுத்த 10 முதல் 12 வருடங்களில் இந்த தொகையை ஒருவரால் உருவாக்க முடியுமா? Gaining Ground Investment Services நிறுவனத்தின் ரவி குமார் டிவி அவர்கள் ET Wealth பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் மாதம் 10,000 ரூபாயை SIPல் முதலீடு செய்வதன் மூலமாக ஒரு கோடி ரூபாய் செல்வத்தை உருவாக்குவது என்பது எதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது என்று கூறியுள்ளார். மாத SIPல் 25,000 முதல் 30,000 ரூபாய் வரை முதலீடு செய்து 12 முதல் 15 சதவீத ரிட்டன் என்ற அடிப்படையில் அடுத்த 18 வருடங்களில் 1 கோடி ரூபாய் தொகையை உங்களால் சேமிக்க முடியும் என அவர் ஆலோசனை கூறியுள்ளார்.
மாதம் 10,000 ரூபாய் என்ற முதலீட்டில் ஆரம்பித்து, ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் 15 சதவீதம் அந்த தொகையை அதிகரிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். மேலும் இந்த தொகையை 2 ஃபண்டுகள் அல்லது முதலீடுகளாக பிரிப்பதன் மூலமாக ஒரு சிறிய அளவு மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்ற பரிந்துரையையும் அவர் செய்கிறார். இதில் முக்கியமான விஷயம் என்பது நீங்கள் முதலீடு செய்யும் தொகையின் அளவு, வழக்கமான முறையில் அதனை கண்காணிப்பது மற்றும் தொடர்ச்சியாக முதலீடு செய்வது ஆகியவை.
ஒவ்வொரு வருடமும் உங்களுடைய மாத SIP தொகையில் 15 சதவீதத்தை அதிகரிக்கும் போது உங்களுடைய இலக்கை விரைவாக அடையலாம். மாதம் 10,000 ரூபாய் SIP முதலீட்டில் ஆரம்பித்து, ஒவ்வொரு வருடமும் அதை 15 சதவீதம் அதிகரித்து, 15 வருடங்களுக்கு 12 சதவீத ரிட்டன் எனும் போது உங்களால் நிச்சயமாக 1 கோடி ரூபாயை எளிதாக அடைய முடியும்.
SIP/மாதம்: ₹10,000
கால அளவு: 12 வருடங்கள்
வட்டி விகிதம்: 12%
அதிகரிப்பு: இல்லை
ரிட்டன்: 30 லட்ச ரூபாய்
SIP/மாதம்: ₹10,000
கால அளவு: 18 வருடங்கள்
வட்டி விகிதம்: 12%
அதிகரிப்பு: இல்லை
ரிட்டன்: 1 கோடி ரூபாய்
SIP/மாதம்: ₹10,000
கால அளவு: 15 வருடங்கள்
வட்டி விகிதம்: ஒவ்வொரு வருடமும் 15%
அதிகரிப்பு: இல்லை
ரிட்டன்: 1 கோடி ரூபாய்
SIP/மாதம்: ₹10,000
கால அளவு: 12 வருடங்கள்
வட்டி விகிதம்: 12%
அதிகரிப்பு: இல்லை
ரிட்டன்: 90 லட்ச – 1 கோடி ரூபாய்
October 19, 2025 6:46 PM IST