சிங்கப்பூர்: சிராங்கூன் சாலையில் மது போதையில் படுத்துக்கிடந்த 44 வயதுமிக்க ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அக்டோபர் 4 ஆம் தேதி நடந்த இந்த சம்பவம், “”Beh Chia Lor – Singapore Road” என்ற பேஸ்புக் கணக்கில் பதிவேற்றப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு 15 வகையான உணவுகளுடன் தடபுடலாக நடந்த விருந்து!
காணொளியில், நான்கு வழிச் சாலையில் கார்கள் செல்வதையும், போக்குவரத்து விளக்கு பச்சை நிறத்தில் இருப்பதையும் காண முடிகிறது.
அவ்வாறு இருக்கையில், கார் ஒன்று திடீரென சாலையின் நடுவில் நிற்பதை காணமுடிகிறது, ஏனென்று பார்த்தால் சாலையில் ஒருவர் படுத்துக் கிடப்பதைக் காண முடிந்தது.
அவர் முழுமையாக ஆடை அணிந்திருப்பதாகத் அதில் தெரியவில்லை.
அக்.4 ஆம் தேதி நள்ளிரவு 2:25 மணியளவில் 900 செராங்கூன் சாலையில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு மாதம் வரை சிறைத்தண்டனை, S$1,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.