Last Updated:
இந்த சூழலில் இந்திய அணி தடுமாறி வருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மா 8 ரன்களில் ஆட்டம் இழந்தார். இருப்பினும் முக்கியமான சாதனையை அவர் ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த் நகரில் இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பௌலிங்கை தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 14 பந்துகளை எதிர்கொண்டு 8 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
ஹேசல்வுட் வீசிய பந்தை அவர் அடிக்க முயன்ற போது ரன்ஷாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 8 ரன்களில் அவர் ஆட்டம் இழந்தாலும் புதிய சாதனையை ரோகித் சர்மா என்று ஏற்படுத்தி இருக்கிறார். அதாவது இன்றைய போட்டி அவர் விளையாடும் 500 ஆவது சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும். அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, தோனி மற்றும் ராகுல் டிராவிட்டுக்கு அடுத்தபடியாக இந்த சாதனையை ரோஹித் சர்மா ஏற்படுத்தி உள்ளார்.
500 சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியிருக்கும் ரோகித் சர்மா 19 ஆயிரத்து 78 ரன்கள் குவித்துள்ளார். இவற்றில் 49 சதங்களும் 108 அரை சதங்களும் அடங்கும்.
October 19, 2025 1:01 PM IST