Last Updated:
பேட்டிங் பலன் அளிக்காத நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு சவாலாக இருந்தால் மட்டுமே அணிக்கு வெற்றி வாய்ப்பு ஏற்படும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மழை குறுக்கிட்டதால் இந்த போட்டி 26 ஓவர்களை கொண்டதாக குறைக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 26 ஓவர்கள் முடிவில் 136 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது.
பெர்த் நகரில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. சிறப்பாக பந்துவீசிய ஆஸ்திரேலிய அணியின் பவுலர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியை தடுமாற வைத்தனர்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆடுகளம் திரும்பிய ரோஹித் சர்மா 8 ரன்களிலும், விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் சுப்மன் கில் 10 ரன்கள் சேர்த்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 11 ரன்களும், அக்சர் படேல் 31 ரன்களும் எடுத்தனர்.
ஓரளவு அதிரடியாக விளையாடிய கே.எல். ராகுல் 31 பந்துகளில் 38 ரன்கள் எடுத்த ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் 10 ரன்னிலும் ஹர்ஷித் ரானா 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
26 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 136 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதையடுத்து 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.
October 19, 2025 2:53 PM IST