Last Updated:
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள கிரீன் லைன் மெட்ரோ ரயிலில் பயணிகளிடம் ஒருவர் பிச்சை எடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள கிரீன் லைன் மெட்ரோ ரயிலில் பயணிகளிடம் ஒருவர் பிச்சை எடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஸ்ரீராம்புரா ரயில் நிலையம் அருகே ரயில் சென்று கொண்டிருக்கும் போது, ஒரு பயணியிடம் இருந்து இன்னொரு பயணிக்கு நடந்து சென்று, ஒருவர் பிச்சை எடுப்பதை காணலாம். மெட்ரோவில் இருந்த அனைத்து பயணிகளும் இந்த மனிதரைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, நெட்டிசன்கள் பரவலாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சக பயணி ஒருவர் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இந்த வீடியோ தற்போது காட்டுத்தீ போல் பரவியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களிடமிருந்து கலவையான எதிர்வினைகளைத் தூண்டியது. தூய்மை மற்றும் ஒழுக்கத்திற்கு பெயர் பெற்ற நம்ம மெட்ரோ போன்ற பொதுப் போக்குவரத்துகளில் எதிர்பார்க்கப்படும் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கத்தை பாதிக்கின்றன என்று பலர் கவலை தெரிவித்துள்ளனர். ஊடக அறிக்கைகளின்படி, இந்த சம்பவம் அக்டோபர் 14 ஆம் தேதி நடந்தது. அப்போது, ஒரு நபர் மெட்ரோவுக்குள் நுழைந்து, பெட்டியில் சுற்றித் திரிந்து பிச்சை எடுக்கத் தொடங்கினார். இந்த நேரத்தில், சில பயணிகள் அசௌகரியமாகத் தெரிந்தனர், சிலர் அவர் அடுத்த நிலையத்தில் இறங்கும் வரை அவரைப் புறக்கணித்தனர்.
A viral video shows a person begging onboard a #NammaMetro train.BMRCL say ,”He entered train with a ticket at 11 am yesterday from Majestic & exited at Dasarahalli.He began begging later during the ride.However,no such activity was observed during routine patrol by HomeGuards.” pic.twitter.com/0WyHeiYQlc
— Yasir Mushtaq (@path2shah) October 15, 2025
இந்த வீடியோவானது X பக்கத்தில் @path2shah என்ற கணக்கில் இருந்து பதிவிடப்பட்டது. அதில், நம்ம மெட்ரோவில் ஒருவர் பிச்சை எடுப்பதை காணலாம், என்ற கேப்ஷன் உடன் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவைப் பொறுத்தவரை, அந்த நபர் காலை 11 மணிக்கு மெஜஸ்டிக்கிலிருந்து டிக்கெட்டுடன் ரயிலில் ஏறி தசரஹள்ளியில் இறங்கியதாக BMRCL தெரிவித்துள்ளது. பயணத்தின் போது அவர் பிச்சை எடுக்க முயன்றார். இருப்பினும், ஹோம்கார்ட்ஸ் இன் வழக்கமான ரோந்துப் பணிகளின் போது இதுபோன்ற எந்த நடவடிக்கையும் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பிறகு, பல நெட்டிசன்கள் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், பாதுகாப்பு சோதனைகள் இருந்தபோதிலும் இந்த நபர் எப்படி மெட்ரோ வளாகத்திற்குள் நுழைந்தார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பெங்களூருவில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல, இந்த சம்பவமானது நகரின் மெட்ரோ அமைப்பின் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த கவலைகளை எழுப்புகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். மற்றவர்கள் மெட்ரோவில் இதுபோன்ற நடத்தையில் ஈடுபடுவது முற்றிலும் தவறு என்று கூறுகின்றனர். பல்வேறு கருத்துக்களுக்கு மத்தியில் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
October 18, 2025 3:58 PM IST