Last Updated:
11.5 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று பெர்த் நகரில் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர்.
நிதானமான ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்திய நிலையில் ரோஹித் சர்மா 14 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய விராட் கோலி 8 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
கேப்டன் சுப்மன் கில் 18 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார். 11.5 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆடுகளத்துக்கு திரும்பிய சீனியர் பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்த நிலையில் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
October 19, 2025 12:12 PM IST