போஸ்டன்: அமெரிக்காவின் போஸ்டன் நகரில் பிஎஸ்ஏ சாலஞ்சர்ஸ் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் அனஹத் சிங், எகிப்தின் ஜனாஸ்வாஃபியுடன் மோதினார். இதில் உலகத் தரவரிசையில் 45-வது இடத்தில் உள்ள அனஹத் சிங் 4-11, 9-11, 11-6, 11-3, 5-11 என்ற செட்கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.