Last Updated:
பெர்த் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் மார்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். ரோஹித் சர்மா 500வது போட்டியில் களம் காண உள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில், முதல் ஒருநாள் போட்டி, பெர்த் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்ற ஜாம்பவான்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும், இந்த போட்டியில் விளையாட இருப்பது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதிலும், சர்வதேச போட்டிகளில் தனது 500ஆவது போட்டியில் ரோஹித் சர்மா களம் காண இருப்பதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு உள்ளனர். இருவரிடமும் நிறைய கற்றுக்கொள்வேன் என்று இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பெர்த் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மார்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். டாஸ்க்கு பின் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் அணியில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 3 ஆல்ரவுண்டர்கள் இடம்பெற்றுள்ளார்கள் என்று தெரிவித்தார்.
இந்திய அணி வீரர்கள் : ரோஹித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், ஹர்ஸ்தீப் சிங்
Chennai,Tamil Nadu
October 19, 2025 8:43 AM IST