இந்த ரயிலானது கிட்டத்தட்ட 2,000 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து, 39 பட்டியலிடப்பட்ட ரயில் நிலையங்களில் பயணிகளை ஏற்றிக் கொள்கிறது. மேலும், உணவானது புதுடெல்லி, போபால், பார்ப்பானி, ஜால்னா, அவுரங்காபாத் மற்றும் மராத்வாடா போன்ற முதன்மையான 6 ரயில் நிலையங்களில் வழங்கப்படுகிறது. இந்த ரயில் நிலையங்களில் சௌகரியமாக உணவு சாப்பிடுவதற்கு பயணிகளுக்கு போதுமான நேரம் கிடைக்கிறது. இந்த 33 மணி நேர பயணத்தின்போது பயணிகளுக்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு ஆகிய மூன்றும் இலவசமாக வழங்கப்படுகிறது.