Last Updated:
பர்சனல் லோன் விண்ணப்பம் குறைவான கிரெடிட் ஸ்கோர், வருமானம், நிலையற்ற வேலை, தவறான ஆவணங்கள், பல விண்ணப்பங்கள் காரணமாக Livemint தெரிவிக்கிறது.
பர்சனல் லோன்கள் என்பது வீட்டை புதுப்பிப்பது, விடுமுறை கொண்டாட்டங்கள், கல்வி கட்டணங்கள் போன்ற அன்றாட செலவுகளுக்கு உதவக்கூடிய ஒரு சௌகரியமான வழியாக இருந்து வருகிறது. அவசர பண தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பலர் பர்சனல் லோன்களை நாடுகின்றனர். குறைந்தபட்ச ஆவணங்கள், லோன் தொகை உடனடியாக அக்கவுண்டில் கிரெடிட் ஆவது மற்றும் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிப்பது போன்ற பல்வேறு அம்சங்கள் பர்சனல் லோன்களில் கிடைக்கும் நன்மைகளாக அமைகின்றன. ஆனால் பர்சனல் லோன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது அது நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது. லோன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக இந்த பதிவில் பார்க்கலாம்.
பர்சனல் லோன்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் உடைய கிரெடிட் ஸ்கோர் 750க்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்று கடன் வழங்குனர்கள் எதிர்பார்க்கின்றனர். அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.
பர்சனல் லோன்கள் வழங்குவதற்கு கடன் வழங்குனர்கள் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வருமான வரம்புகளை நிர்ணயித்துள்ளனர். ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 25,000 முதல் 30,000 வரை வருமானம் இருக்க வேண்டும் என்று பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த அடிப்படை தகுதி வரம்பை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.
அடிக்கடி நீங்கள் உங்களுடைய வேலையை மாற்றிக் கொண்டே இருப்பது, ஒரு குறிப்பிட்ட வேலையில் குறுகிய காலம் மட்டுமே வேலை பார்ப்பது போன்றவை உங்களுடைய கிரெடிட் ப்ரொபைலை மோசமான முறையில் பாதிக்கும். இதனால் பல கடன் வழங்குனர்கள் கடன் விண்ணப்பங்களை நிராகரித்து விடுகின்றனர்.
அதிக கடன் -வருமான விகிதம் இருப்பது நீங்கள் ஏற்கனவே பல்வேறு கிரெடிட் கார்டு அல்லது பர்சனல் லோன் பேமெண்ட்களை செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை குறிக்கும். இதனால் உங்களுடைய பர்சனல் லோன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம்.
பெயரில் பிழைகள், தவறான PAN அல்லது ஆதார் விவரங்கள் போன்றவற்றை நீங்கள் சமர்ப்பித்தால் உங்களுடைய லோன் விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்படும்.
ஒரு குறுகிய காலகட்டத்தில் வெவ்வேறு வங்கிகளில் நீங்கள் பல்வேறு பர்சனல் லோன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது, அதன் விளைவாக செய்யப்படும் ஹார்ட் என்கொயரி உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். இதனால் உங்களுடைய கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகிறது.
கடன் வழங்குவதற்கு பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது வரம்புகளை விதிக்கின்றனர். மேலும் நாட்டினம் அல்லது வேறு சில கட்டுப்பாடுகளை உங்களால் பூர்த்தி செய்ய முடியாவிட்டால் பர்சனல் லோன் விண்ணப்பங்கள் ஆட்டோமேட்டிக்காகவே ரிஜெக்ட் செய்யப்படும்.
ஒரு கடன் சுயவிவரத்தை உருவாக்க தவிக்கும் நபர்கள் தாங்கள் கடனை சரியாக திருப்பி செலுத்தி விடுவார்கள் என்பதை கடன் வழங்குனரிடம் வெளிப்படுத்துவதற்கு சிரமப்படுகின்றன. இதனால் கடன் விண்ணப்பங்கள் ரிஜெக்ட் செய்யப்படுகிறது. எனவே சுருக்கமாக சொன்னால் நல்ல கிரெடிட் ஸ்கோர், நிலையான வேலை, நிலையான வருமானம் மற்றும் கடனை நிர்வகிப்பதற்கான உங்களுடைய திறன் ஆகியவை பர்சனல் லோன்கள் விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
October 18, 2025 3:45 PM IST