Last Updated:
US Green Card | 2022-ஆம் ஆண்டு மட்டுமே இந்தியாவிலிருந்து ஒன்றே கால் லட்சம் பேர் அமெரிக்காவுக்கு குடியேறிய நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியர்கள், 2029-ஆம் ஆண்டு வரை, அமெரிக்காவில் க்ரீன் கார்டுகளைப் பெற முடியாது என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து வெளிநாட்டவர்கள் அமெரிக்க குடிமக்களாக மாறுவதற்கான நடைமுறைகளை கடுமையாக்கி வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்க அரசின் சலுகைகளைப் பெற உதவும் க்ரீன் கார்டுகளை பிற நாட்டவர்கள் பெறுவதில் பல விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக, க்ரீன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள், அமெரிக்கா குறித்து கேட்கப்படும் கேள்விகள் உள்ளிட்டவை அடங்கிய கடுமையான தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக உள்ளது.
இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் எந்தெந்த நாடுகளில் இருந்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அமெரிக்காவுக்கு குடியேறியுள்ளனரோ, அந்நாடுகளுக்கு க்ரீன் கார்டு வழங்குவதை நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, இந்தியர்கள் 2029-ஆம் ஆண்டு வரை அமெரிக்க க்ரீன் கார்டு பெற முடியாது என கூறப்படுகிறது.
2022-ஆம் ஆண்டு மட்டுமே இந்தியாவிலிருந்து ஒன்றே கால் லட்சம் பேர் அமெரிக்காவுக்கு குடியேறிய நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Chennai,Tamil Nadu
October 17, 2025 11:56 AM IST