சிங்கப்பூரில் வெளிநாட்டு பணிப்பெண்கள் தொடர்பான விதிமீறல்களில் ஈடுபட்டு பிடிபட்ட முதலாளிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது வீட்டு ஜன்னல்களை சுத்தம் செய்யும் பணிப்பெண்கள் தேவையான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றும் அதனை உறுதி செய்யாத முதலாளிகள் பிடிபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 15 முதலாளிகள் இந்த விதிமீறல் தொடர்பில் சிக்கியதாக சொல்லப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் எழுந்த கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மனிதவள அமைச்சர் டான் சீ லெங், இந்த புள்ளி விவரங்களை வழங்கினார்.
வீட்டு ஜன்னலை சுத்தம் செய்யும்போது விபத்து ஏற்பட்டு மரணமும் நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம், தோ பாயோவில் உள்ள குடியிருப்பில் பணிப்பெண் ஒருவர் தரை பகுதியில் இறந்த நிலையில் கிடந்தார்.
வீட்டு ஜன்னலை சுத்தம் செய்யும்போது அவர் கீழே விழுந்து இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
அதே போல இதற்கு முன்னர் 2021 ஆம் ஆண்டு பணிப்பெண் ஒருவர் மருத்துவமனையில் இறந்தார், அவரும் ஜன்னலை சுத்தம் செய்யும்போது கீழே விழுந்து இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
முதியவரின் உடல் உறுப்புகளை வீடியோ காலில் காட்டிய பணிப்பெண் – CCTVயில் சிக்கிய கதை