அப்போது, மாணவியுடன் வாக்குவாதம் செய்த இளைஞர், திடீரென அவரின் முகத்தில் மிளகாய் பொடியை தூவியுள்ளார். உடனே, மாணவி சுதாரிப்பதற்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரின் கழுத்து மற்றும் முகத்தில் கொடூரமாக குத்தியுள்ளார். அப்படியும் ஆத்திரம் தீராமல் கழுத்தை அறுத்ததில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த யாமினி பிரியா, நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். பெங்களூருவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் தனிப்படை அமைத்து கொளையாளியை தேடி வந்தனர்.
இந்த நிலையில், மாணவியின் எதிர் வீட்டில் வசித்து வந்த விக்னேஷ் என்ற இளைஞரையும், அவருக்கு உடந்தையாக இருந்த ஹரிஷ் என்பவரையும் கைது செய்துள்ளனர். விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்லூரி மாணவி யாமினி பிரியாவுக்கு, அண்மைக் காலமாக விக்னேஷ் லவ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார்.
அவரின் காதலை மாணவி ஏற்க மறுத்த போதும் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் கோவில் விழாவின் போது, வலுக்கட்டாயமாக மாணவியின் கழுத்தில் மஞ்சள் கயிறை கட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இனி நீ தான் என் பொண்டாட்டி எனக் கூறிக் கொண்டு சொல்ல முடியாத அளவிற்கு டார்ச்சர் செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில், விக்னேஷை அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். ஆறு மாதங்கள் கடந்த நிலையில் மீண்டும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு யாமினி பிரியாவை இளைஞர் பின் தொடர்ந்துள்ளார். ஆனால், உன்னை ஏற்று கொள்ள முடியாது என்று மாணவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த இளைஞர், தனது நண்பரின் உதவியுடன் காசு கொடுத்து கடையில் கத்தியை வாங்கிக் கொண்டு, சதித் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, சம்பவத்து அன்று தனியாக நடந்து வந்த யாமினி பிரியாவை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அளித்த புகாரில் விக்னேஷ் மீது, போலீசார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் தனது மகள் காப்பாற்றப்பட்டு இருப்பாள் என்று பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
போலீசார் அலட்சியம் காட்டியதால், தற்போது தனது மகளின் உயிர் பறிபோயுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். இனியும் தாமதிக்காமல் போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டு, கொலையாளிக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெங்களூருவில் ஒருதலைக் காதல் வெறியில் கல்லூரி மாணவியை, பக்கத்து வீட்டு இளைஞர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…
October 18, 2025 9:49 PM IST
கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை.. கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டி அத்துமீறல் – அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி