சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டில் வெளியான செய்தியின்படி, பல ஆண்டுகளாக வேலையில்லாமல் இருந்த டக்குயா, ஜப்பானின் பிரபலமான உணவு விநியோக ஆப் ஆன டெமே-கேனில் இரண்டு ஆண்டுகளாக தினமும் ஈல் பென்டோ, ஹாம்பர்கர் ஸ்டீக் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற விலையுயர்ந்த உணவுகளை ஆர்டர் செய்தார். அதுவரை எல்லாம் சாதாரணமாக இருந்தது, உண்மையான விளையாட்டு டெலிவரிக்குப் பிறகுதான்.
ஒவ்வொரு முறையும், அவர் ஆப் இல், எனது ஆர்டர் வரவில்லை, என்று புகார் கூறுவார். புகாரை அடுத்து நிறுவனமும் அவருக்கு முழுத் தொகையையும் திருப்பித் தரும், அதாவது அவருக்கு உணவு மற்றும் பணம் திரும்பக் கிடைத்தது. இதன் விளைவாக இரண்டு ஆண்டுகளில் 3.7 மில்லியன் யென் (தோராயமாக ₹2.1 மில்லியன்) இழப்பு ஏற்பட்டது.
டகுயா ஒன்றல்ல, இரண்டல்ல, 124 போலி கணக்குகளை உருவாக்கியிருந்தார். ஒவ்வொரு முறையும் புதிய பெயர், தவறான முகவரி மற்றும் போலி ஆவணங்களிலிருந்து பெறப்பட்ட ஒரு ப்ரீபெய்ட் சிம் கார்டைப் பயன்படுத்தி வந்தார். இப்படிச் செய்வதன் மூலம் யாரும் தன்னைக் கண்டுபிடிக்க முடியாது என்று அவர் நினைத்தார்.
அந்த அறிக்கையின்படி, ஜூலை 30 ஆம் தேதி, டக்குயா மீண்டும் ஐஸ்கிரீம் மற்றும் சிக்கன் ஸ்டீக்கை ஆர்டர் செய்துவிட்டு, பின்னர் ஆர்டர் வரவில்லை என்று கூறி பணத்தைத் திரும்ப கேட்டார். ஆனால் இந்த முறை, நிறுவனம் சந்தேகப்பட்டது.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், பணத்தைத் திரும்பப் பெறும் கொள்கையில் உள்ள குறைபாட்டைப் பயன்படுத்தி, நிறுவனத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது தெரியவந்தது. டகுயா இதை ஒரு முறை அல்லது இரண்டு முறை அல்ல, 1095 முறை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து நிறுவனம் உடனடியாக இது குறித்து போலீசில் புகார் அளித்தார், புகாரை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த மோசடி அம்பலப்படுத்தப்பட்ட பிறகு, உணவு விநியோக ஆப் நிறுவனங்கள் உஷார்படுத்தப்பட்டு, இப்போது ஐடி வெரிஃபிகேஷன் மற்றும் செக்யூரிட்டி சிஸ்டமை கடுமையாக்கியுள்ளன. இதற்கிடையில்,இது குறித்த செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலானதை அடுத்து நெட்டிசன்கள் கோபமடைந்துள்ளனர். அவர் தனது வேலையில் இவ்வளவு சிந்தனையைச் செலுத்தியிருந்தால், அவர் எங்காவது நல்ல நிலைமையில் இருந்திருப்பர் என்று கூறுகிறார்கள்.
October 17, 2025 7:42 PM IST