[ad_1]
எமர்ஜென்சி ஃபண்டாக எவ்வளவு பணத்தைச் சேமித்து வைக்க வேண்டும்?: பொதுவாக 3 அல்லது 6 மாத அத்தியாவசிய செலவுகள், வாடகை, இஎம்ஐ, மளிகை சாமான், பள்ளி கட்டணங்கள், சப்ஸ்கிரிப்ஷன்கள் மற்றும் யூடிலிட்டி பில்களுக்கான பணத்தை எமர்ஜென்சி ஃபண்டாக எடுத்து வைக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். உதாரணமாக, ஒரு குடும்பத்தின் மாதச் செலவு ஒரு லட்ச ரூபாய் எனில் 3 முதல் 6 லட்சம் ரூபாயை எமர்ஜென்சி ஃபண்டிற்காக ஒதுக்கலாம். தொழில் செய்பவர்கள் அல்லது சீரற்ற வருமானம் கொண்டவர்கள் 9 முதல் 12 மாதச் செலவுத் தொகையை எமர்ஜென்சி நிதியாக ஒதுக்க வேண்டும்.