[ad_1]
Last Updated:
புரோ கபடி லீக் சீசன் 12 கபடித் தொடரை நேரலையாகவும் பிரத்தியேகமாகவும் ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் கண்டு மகிழலாம்.
ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் ப்ரோ கபடி லீக் போட்டிகள் கடந்த சீசனை விடவும் மிகுந்த விறுவிறுப்புடன் நிறைவேறுகின்றன. இதனால் ரசிகர்கள் புதுவிதமான அனுபவத்தை உணர்கிறார்கள். இந்தியாவில் கபடி லீக் போட்டிகளில் மிகப்பெரிய மாற்றத்தை புரோ கபடி லீக் கொண்டு வந்தது. இதன் மூலம் ஏராளமான திறமையான கபடி வீரர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்குத் திறமை வெளிப்படுத்த சிறந்த தளங்கள் உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை 11 புரோ கபடி லீக் சீசன்கள் முடிந்துள்ளன. இந்நிலையில் பன்னிரண்டாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. முந்தைய சீசன்களை விடவும் இந்த சீசன் மிகுந்த விறுவிறுப்புடன் நிறைவு பெறுவதாக போட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 14 போட்டிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் 10 போட்டிகள் வெறும் 5 புள்ளிகளில் மட்டுமே வெற்றி தோல்வியைத் தீர்மானித்துள்ளன.
அதிலிருந்து இந்த ஆட்டங்கள் எவ்வளவு விறுவிறுப்பும் பரபரப்பும் நிறைந்தது என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். கடந்த சீசனில் 43 சதவீத ஆட்டங்கள் மட்டுமே ஐந்து புள்ளிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானித்தன. அதற்கு முந்தைய இரண்டு சீசன்கள் 50 சதவீத போட்டிகள் 5 புள்ளிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானித்தன. அவற்றுடன் ஒப்பிடும் போது புரோ கபடி லீக் சீசன் 12 மிகுந்த விறுவிறுப்பை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.
இதுகுறித்து புனேரி பல்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் அஜய் தாகூர் அளித்த பேட்டியில், “12வது சீசன் மிகவும் போட்டியாக உள்ளது. இதனை நேரில் கண்டு களிப்பதை மிகப் பெரிய தருணமாக உணர்கிறேன். புரோ கபடி லீக் நன்றாக வளர்ந்துள்ளது. இப்போது வீரர்கள் பிட்னஸ் மற்றும் பயிற்சியை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டு செயல்படுகிறார்கள். இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் ஆட்டத்தை இன்னும் விறுவிறுப்பாக மாற்றி உள்ளன. ஒரு லீக் தொடருக்கு இத்தகைய விதிமுறைகள் அவசியம் என்று கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.
புனேரி பல்தான் அணியின் கேப்டன் அஸ்லம் இனாம்தார் கூறுகையில், “முந்தைய சீசன்களை விடவும் 12 வது சீசன் அதிக போட்டி நிறைந்ததாக இருக்கிறது. இந்த போட்டித் தொடர் எங்களுடைய சிறந்த விளையாட்டை வெளிக்கொண்டுவரும். மிகவும் நெருக்கமாக சென்று வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்படுகின்றன. இந்தத் தொடர் முழுவதுமே இது போன்ற பரபரப்பான ஆட்டங்கள் இன்னும் இருக்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
புரோ கபடி லீக் தொடர் குறித்து ஜியோ ஹாட்ஸ்டார் நிபுணர் ரிஷாங்க் தேவாதிகா கூறுகையில், “புரோ கபடி லீக் போட்டிகள் மிக நெருக்கமாக சென்று முடிந்துள்ளன. இது ஆட்டத்தை இன்னும் விறுவிறுப்பாக மாற்றுகிறது. வீரர்கள் அதிக ஆக்ரோசத்துடன் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இளம் வீரர்களும் மூத்த வீரர்களுக்கு போட்டி கொடுத்து விளையாடினார்கள்.
இத்தகைய விளையாட்டு உணர்வு தொடரும் என்று நம்புகிறேன். அதன் மூலம் ரசிகர்கள் இன்னும் திரில்லிங்கான பல ஆட்டங்களை காண்பார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார். புரோ கபடி லீக் தொடருக்கு டிஜிட்டல் தளங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஜியோ ஸ்டார் நெட்வொர்க்கில் இந்த புரோ கபடி லீக் தொடரை பார்க்கும் நேரம் 22 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. புரோ கபடி லீக் சீசன் 12 கபடித் தொடரை நேரலையாகவும் பிரத்தியேகமாகவும் ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் கண்டு மகிழலாம்.
September 11, 2025 2:21 PM IST
ஒவ்வொரு மேட்ச்சும் விறுவிறுப்பு.. ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் ப்ரோ கபடி லீக்கை மிஸ் பண்ணிடாதீங்க..