[ad_1]
Last Updated:
கடந்த வாரத்தை காட்டிலும், இந்த வாரம் காய்கறிகளின் விலை குறைந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள வார சந்தை காய்கறி விற்பனையாளர்களின் வியாபார கூடமாகவும், விவசாயிகளின் சந்தைப்படுத்தும் இடமாகவும் விளங்குகிறது. இந்த சந்தையின் சிறப்புகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
வாரம் வாரம் புதன்கிழமையன்று செயல்படும் இந்த வாரச் சந்தையானது, காய்கறி விற்பனையாளர்களின் வியாபார கூடமாக அமைந்துள்ளது. இச்சந்தை சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வாரத்தின் புதன்கிழமையில் மட்டும் நடைபெறும் இந்த சந்தையில் அனைத்துவிதமான காய்கறிகள், பழங்கள், மீன்கள் என ஒட்டுமொத்தமும் இங்கு வாங்கி செல்லும் வகையில் உள்ளது.
சந்தை நாளான புதன்கிழமையன்று சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களும் வந்து காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை சில்லறையாகவும், மொத்தமாகவும் வாங்கி செல்வார்கள். சிவகங்கையின் பெரிய சந்தையாக பார்க்கப்படும் இந்த சந்தையை நம்பி விற்பனையாளர்களும், விவசாயிகளும் உள்ளனர். இந்த சந்தையை நம்பியே வாழ்க்கை நடத்தி வரும் வியாபாரிகளும், விவசாயிகளும் உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சந்தையில் வியாபாரம் நடத்தி வரும் தனலட்சுமி என்ற வியாபாரி பேசியபோது, கடந்த வாரத்தை காட்டிலும், இந்த வாரம் காய்கறிகளின் விலை குறைந்திருப்பதாக தெரிவித்தார். தக்காளி 2 கிலோ 50 ரூபாய், சின்ன வெங்காயம் 1 ½ கிலோ 50 ரூபாய் மற்றும் பெரிய வெங்காயம் 2 கிலோ 50 ரூபாய், மிளகாய் – 80, இஞ்சி கிலோ 160, புதினா மற்றும் மல்லி தலைகள் 80 க்கும், அதே நேரம் கருவேப்பிலை 60 திற்கும் விற்பனை ஆவதாகவும், கடந்த வாரம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகளின் விலை உச்சத்தில் இருந்ததாகவும் தற்போது விலை குறைந்திருப்பதாக தனலட்சுமி தெரிவித்தார்.
கடந்த வாரம் ஓணம் பண்டிகையில் இருந்த வியாபாரம் தற்போது இல்லாததால் முதலுக்கே மோசம் ஆகிவிடும் போல் உள்ளதாக வியாபாரி பாலமுருகன் வேதனை தெரிவித்தார். என்னவாக இருந்தாலும் சிவகங்கையின் பெரிய சந்தையாக விளங்கும் இந்த சந்தை அனைவருக்குமான சந்தை என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
September 11, 2025 3:44 PM IST