[ad_1]
சிங்கப்பூரில் சட்டவிரோத ஓட்டுநராக வேலைசெய்யும் வெளிநாட்டினருக்கு எதிராக பொதுமக்கள் இனி புகாரளிக்கலாம்.
சட்டவிரோத ஓட்டுநர் வேலைகளுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கையை வலுப்படுத்தும் நோக்கில், இனி அவ்வாறான குற்றங்களைச் செய்யும் வெளிநாட்டு ஊழியர்கள் மீது அரசாங்கத்திடம் புகாரளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
உட்லண்ட்ஸில் லாரியுடன் சட்டவிரோத வேலை… இந்திய ஆடவரை மடக்கி பிடித்த சுங்கத்துறை
விநியோக ஓட்டுநர்களின் கணக்குகளைத் தவறாகப் பயன்படுத்துதல்
சட்டவிரோத எல்லை தாண்டிய பயண சேவை வழங்குதல்
சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக பயண சேவை வழங்குதல்
டெலிகிராம் அரட்டைக் குழுக்கள் போன்ற உரிமம் பெறாத சேனல்கள் வழியாக ஓட்டுநர் சேவைகளை வழங்குவோர் மீதும் இனி புகாரளிக்கலாம்.
சிங்கப்பூரில் நான்கு வெளிநாட்டு ஊழியர்கள் கைது: 644 ஊழியர்களிடம் சோதனை
அரசாங்கம் மற்றும் ஓட்டுநர் சேவை வழங்கும் அமைப்புகள் (PWAs) இணைந்து இதற்கான புதிய பிரத்யேக புகார் செய்யும் வசதியை உருவாக்கியுள்ளதாக மனிதவள இணை அமைச்சர் கோ போ கூன் இன்று (செப்டம்பர் 11) அறிவித்தார்.
ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள், வெளிநாட்டுப் பதிவு செய்யப்பட்ட கார்கள் மூலம் சட்டவிரோத வாடகை சேவைகள் வழங்கும் நபர்கள் குறித்து LTA ஆணையத்தின் OneMotoring வலைத்தளத்தில் புகார்களை சமர்ப்பிக்கலாம்.
மேலும், சட்டவிரோதமாக விநியோக சேவை செய்யும் வெளிநாட்டு ஊழியர்கள் குறித்தும் இனி MOM-ன் “Report an Infringement” என்ற விதிமீறல் வலைப்பக்கத்தில் புகாரளிக்கலாம்.
இணைய வழி சேவை வழங்கும் ஊழியர்களின் வாழ்வாதாரம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்காக முத்தரப்புக் குழுவின் பத்து பரிந்துரைகளின் ஒரு பகுதியாக புதிய புகாரளிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் செப்.1 – 4 வரை சோதனை: நீண்டகால அனுமதியுடையோர் உட்பட 123 பயணிகள் சிக்கினர்!