[ad_1]
ஊடக சந்திப்பில் பிரதி அமைச்சர் வட்டகல வெளியிட்ட கருத்து தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச 01 பில்லியன் இழப்பீடு கோரியதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், நாமல் ராஜபக்ச, தனது நற்பெயருக்கு அவதூறு பரப்பியதாகக் தெரிவித்து ரூ. 1 பில்லியன் இழப்பீடு கோரி அனுப்பிய சட்ட அறிவிப்புக்கு பதிலளிக்கத் தான் தயாராக இருப்பதாக,துணை அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
நாமலை நோக்கிய கேள்விக்கணை
இன்று (10) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது சுனில் வட்டகல,
பிரித்தானியாவில் உள்ள சிட்டி பல்கலைக்கழகத்தில் உங்கள் தகுதி உண்மையானதா? சட்டக் கல்லூரியின் இறுதியாண்டு தேர்வை ஒரு தனி அறையில் எழுதி தொடர்புடைய தகுதியைப் பெற முடிந்ததா? தாஜுதீன், லசந்த விக்ரமதுங்க, பிரதீப் எக்னலிகொட போன்ற பல்வேறு உயர்மட்ட மரணங்களுடன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தொடர்பு உள்ளதா? ஜூலம்பிட்டிய அமரே உங்கள் மெய்க்காப்பாளரா? சிறப்புப் படையினர் நிமல் லான்சாவைத் தேடி வந்தபோது உங்கள் தந்தை அவரைப் பாதுகாத்தாரா? இந்தக் கேள்விகளை நான் நீதிமன்றத்தில் கேட்பேன், என்று பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |