[ad_1]
Last Updated:
ஏற்கனவே இதற்கான சோதனை ஓட்ட முயற்சிகள் நடைபெற்று இறுதி கட்ட வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் முதன்முறையாக விரைவில் இயக்கப்பட உள்ளது. இது எந்த வழித்தடத்தில் இயங்கும் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.
நாட்டிலேயே மிக அதிக வேகத்தில் செல்லக்கூடிய ரயில்களாக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை மணிக்கு 110 கிலோமீட்டர் முதல் 130 கிலோமீட்டர் வரையில் இயக்கப்படுகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தளவில் சென்னை மற்றும் திருநெல்வேலி இடையேயும், சென்னை மற்றும் கன்னியாகுமரி இடையேயும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதிவேகத்தில் இந்த ரயில்கள் செல்லக்கூடிய இடங்களுக்கு சென்று சேர்வதால் பயணிகள் மத்தியில் இதற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை உறுதி செய்யும் வகையில் வந்தே பாரத் ரயில்களில் டிக்கெட்டுகள் விறுவிறுவென விற்றுத் தீர்ந்து விடுகின்றன. இதுவரை வந்தே பாரத் ரயில்கள் இருக்கைகளைக் கொண்டதாக மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே இதற்கான சோதனை ஓட்ட முயற்சிகள் நடைபெற்று இறுதி கட்ட வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த புதிய ஸ்லீப்பர் பெட்டிகளைக் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் சாதாரண ரயில்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக அமையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
September 10, 2025 4:15 PM IST