[ad_1]
Last Updated:
நேபாளத்தில் அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலகியதால், காத்மாண்டு இயல்பு நிலைக்கு திரும்புகிறது.
நேபாளத்தில் அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலகியதை அடுத்து, இளைஞர்களின் போராட்டம் தணிந்ததால், காத்மாண்டு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக தொடங்கிய போராட்டம், வன்முறையாக வெடித்து ஆட்சியையே கவிழ்த்தது. இளம் தலைமுறையின் கட்டுக்கடங்காத போராட்டத்தால் அந்நாட்டு பிரதமர் மற்றும் அதிபர் அடுத்தடுத்து பதவி விலகினர்.
இந்நிலையில் போராட்டங்கள் தணிந்தாலும், வன்முறையால் ஏற்பட்ட விளைவுகள், கோரமாக காட்சி அளிக்கின்றன. குறிப்பாக, காத்மாண்டுவில் உள்ள நாடாளுமன்றம் மற்றும் அரசு கட்டடங்கள் முற்றிலுமாக உருக்குலைந்து விட்டன. இதேபோல், நேபாள உச்சநீதிமன்றம் மற்றும் தலைமைச் செயலகத்தில் தற்போதும் நெருப்பு பற்றிக் எரிந்து கொண்டுதான் உள்ளது.
இதனிடையே, உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கன்ஜ் மாவட்டம் சோனலி என்ற இடத்தின் வழியாக நேபாளத்தில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர். மேலும், மருத்துவ அவசரம் காரணமாக நேபாளத்தை சேர்ந்தவர்களும் தீவிர சோதனைகளுக்கு பிறகு இந்தியாவிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் உள்ள பனிதாங்கி வழியாகவும் நேபாளத்தில் இருந்து இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர். இந்நிலையில், நேபாளத்தில் மீண்டும் போராட்டம் வெடிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கையாக ராணுவத்தினரின் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேபாளத்தில் அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலகியதை அடுத்து, இளைஞர்களின் போராட்டம் தணிந்ததால், காத்மாண்டு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
September 10, 2025 2:59 PM IST