[ad_1]
அதைத் தொடர்ந்து அமெரிக்க அதிகாரி ஒருவர் `இந்த வியூகம் ஆசியப் பொருளாதாரங்களுக்கு எதிரான அமெரிக்காவின் குறிப்பிட்ட முன்னேற்றம்.
ரஷ்யாவின் மிகவும் விலைக் குறைவான கச்சா எண்ணெயை வாங்குவதிலிருந்து இந்தியா மற்றும் சீனாவைத் தடுப்பதே இந்த வரிகளின் முக்கிய நோக்கம்.
இரு நாடுகளுக்கும் 100 சதவிகிதம் வரை வரி விதிக்க வேண்டும் என அதிபர் உறுதியாக தெரிவிக்கிறார். கடும் வர்த்தக நடவடிக்கைகளுக்கான இந்த அழுத்தம், வெள்ளை மாளிகையில் அதிகரித்து வரும் அதிருப்தியின் பிரதிபலிப்பு.
சீனா, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் வரை கடும் வரிகளை விதிப்பதுதான் மிகவும் பயனுள்ள அழுத்தம் என அதிபர் ட்ரம்ப் வாதிட்டார்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியா மற்றும் சீனாவுடனான வர்த்தக உறவில் பதற்றம்
கடந்த ஆகஸ்ட் மாதம், இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்கியதைக் காரணம் காட்டி, இந்தியாவுடனான வரிகளை அமெரிக்கா 50% ஆக உயர்த்தியது.
இருப்பினும், டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும், நேர்மறையான முடிவு ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் மோடியை “மிகவும் நல்ல நண்பர்” எனக் குறிப்பிட்ட அவர், நட்பு தொடரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிலையில்தான் நேற்று அதிபரின் இந்த ஆலோசனையின் செய்திகளும் வெளியாகியிருக்கிறது.