[ad_1]
சியாச்சின்:லடாக் யூனியன் பிரதேசத்தின் சியாச்சின் கிரேசியர் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் அடங்கிய குழுவினர் வழக்கம்போல் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தனர்.
இதற்கிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், ராணுவ வீரர்கள் பலர் சிக்கிக் கொண்டனர்.இந்நிலையில், மீட்புக் குழுவினர் மோஹித் குமார், நீரஜ் குமார் சவுத்ரி, தாபி ராகேஷ் தேவ்பாய் ஆகிய 3 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.கடுமையான வானிலை மற்றும் பனிக்குவியலுக்கு இடையே தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.