[ad_1]
நாடாளுமன்றத்தை முற்றுகையிட சென்ற Gen Z போராட்டக்காரர்கள் மீது, போலீசார் நடத்திய கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டில் 19 இளைஞர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர், சீருடையில் இருந்த பள்ளி மாணவர்கள். வன்முறைக்கு பயந்து, சமூக வலைதளங்கள் மீதான தடையை அவசர அவசரமாக நீக்கியது நேபாள அரசு. காத்மாண்டு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த 144 தடையை மீறி, பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் முதலில், நாடாளுமன்ற கட்டத்திற்கு தீ வைத்தனர். பின்னர், குடியரசுத் தலைவர் ராம் சந்திர பவுடல் (Ram Chandra Poudel), பிரதமர் சர்மா ஒலி ஆகியோரின் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.