[ad_1]
Last Updated:
நேபாளத்தில் வன்முறை வெடித்த நிலையில், இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேபாளத்தில் நிலையற்ற தன்மை நிலவும் சூழலில் இந்தியர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், அங்கு விரைவில் அமைதி திரும்ப விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் அரசுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், நேபாளத்தில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்திய அங்குள்ள இந்திய தூதரகம் உதவி தேவைப்படுவோர் அழைக்க உதவி எண்களை அறிவித்துள்ளது.
மேலும், காத்மண்டு விமான நிலையம் மூடப்பட்ட நிலையில், இந்தியாவில் இருந்து நேபாளம் செல்லக் கூட்டிய ஏர் இண்டியா, இண்டிகோ, நேபாள் ஏர்லைன் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை, நெஞ்சை உலுக்குவதாக தெரிவித்துள்ளார். பல்வேறு இளைஞர்கள் உயிரிழந்திருப்பதை அறிந்து மனம் வேதனை அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் நிலைத்தன்மை, அமைதி மற்றும் வளம் ஏற்படுவது நமக்கு மிகவும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நேபாளத்தில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் அமைதி ஏற்பட ஆதரவு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
September 10, 2025 9:20 AM IST