[ad_1]
Last Updated:
ஐக்கிய அரபு அமீரகம் அணி வீரர்களுக்கு டி10 உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளதால் இந்திய வீரர்களுக்கு கடும் சவால் அளிக்க வாய்ப்பு உள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது.
17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் துபாயில் இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா உள்ளிட்டோர் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் பந்துவீச்சில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் ஐக்கிய அரபு அமீரகம் அணி வீரர்களுக்கு டி10 உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளதால் இந்திய வீரர்களுக்கு கடும் சவால் அளிக்க வாய்ப்பு உள்ளது. இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கும் நிலையில் இந்திய அணி வெற்றியுடன் தனது ஆட்டத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஆசியக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் ஹாங்காங் அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் ஊதித் தள்ளியது. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய ஹாங்காங், ஆப்கானிஸ்தான் வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு வெறும் 94 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியைத் தழுவியது.
17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 20 ஓவர் வடிவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நேற்று தொடங்கி 28ஆம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் உள்ள 8 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. முன்னதாக கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் கோப்பையுடன் எட்டு அணிகளின் கேப்டன்களும் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
September 10, 2025 7:43 AM IST