[ad_1]
Last Updated:
நேபாளத்தில் போராட்டம் தீவிரமடைந்து, அந்நாட்டு அதிபர், பிரதமர் உள்ளிட்டோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு தற்போது ராணுவம் அதிகாரத்தைக் கையில் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலி, அதிபர் ராம் சந்திர பவுடல் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து அங்கு தற்போது ராணுவம் அதிகாரத்தை கையில் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..
நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்தும், ஊழல் நிர்வாகம், வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகளை முன் வைத்து இளைஞர்கள் நேற்று போராட்டத்தில் குதித்தனர். அப்போது, காவல்துறையினர் துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர். இளைஞர்கள் நடத்திய போராட்டத்தை அடுத்து நேற்று இரவு சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்குவதாக பிரதமர் அறிவித்தார். துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர், வேளாண் துறை அமைச்சர் ஆகியோர் பதவி விலகினர்.
இந்நிலையில், இன்றும் அரசுக்கு எதிரான போராட்டம் நீடித்து வருகிறது. துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று பிரதமர் சர்மா ஒலியை பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காத்மாண்டுவில் நாடாளுமன்றத்துக்கு செல்லும் அனைத்து வழிகளையும் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது கற்களை வீசி விரட்டியடித்தனர்.
மேலும் காத்மாண்டுவில் உள்ள நேபாளி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை தீ வைத்து எரித்தனர். இதேபோன்று லலித்பூரில் உள்ள அமைச்சர் பிரித்வி சுபா குருங்கின் வீட்டை தீ வைத்து கொளுத்தினர். இதனைத்தொடர்ந்து முன்னாள் பிரதமர் பிரசண்டா வீடு மீதும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.
மேலும், காத்மாண்டுவில் உள்ள நேபாள பிரதமர் சர்மா ஒலியின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அவரது வீடு பற்றி எரிந்துள்ளது. இந்நிலையில், அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, நேபாள அதிபர் ராம் சந்திர பவுடல் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், அந்நாட்டு நிதி அமைச்சரை பொதுமக்கள் சேர்ந்து துரத்தி துரத்தி உதைக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் நேபாளத்தில் ராணுவம் தற்போது அதிகாரத்தை கையில் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
September 09, 2025 6:03 PM IST
நேபாளம் போராட்டம்; அதிகாரத்தை கையில் எடுத்த ராணுவம்! அதிபர்… பிரதமர் ராஜினாமாவைத் தொடர்ந்து நடவடிக்கை