[ad_1]
Last Updated:
டெல்லி விமான நிலையத்தில் பயணி ஒருவர் சரிந்து விழுந்த நிலையில், அருகில் இருந்த சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் அவருக்கு சிபிஆர் அளித்து, அவரது உயிரைக் காப்பாற்றிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும்நிலையில், அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்தில் பயணி ஒருவர் சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) அதிகாரி ஒருவர், தனது விரைவான செயல்பாட்டின் மூலம் அந்த பயணியின் உயிரைக் காப்பாற்றினார். சம்பவ இடத்திலேயே அவர் சிபிஆர் சிகிச்சை வழங்கி, மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கும் முன்பு பயணியை உயிர்ப்பித்தார்.
அந்த வீடியோவில், அதிகாரி ஒருவர் பயணியிடம் விரைந்து சென்று சிபிஆர் அளித்து, அவர் சுயநினைவு பெறும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, சிஐஎஸ்எஃப் அதிகாரியின் தன்னலமற்ற சேவைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்த நிகழ்வு, நாட்டின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றில் மருத்துவ அவசர நிலைகளைக் கையாள்வதில் பாதுகாப்பு ஊழியர்களின் விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. பின்னர் அந்தப் பயணி மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
CISF: Always Alert, Saving Lives.
On 01.09.2025, passenger Mohammad Mokhtar Alam – bound for Gaya – collapsed in the Pre-SHA area of @DelhiAirport (T1) and fell unconscious.Showing exemplary alertness & presence of mind, SI/Exe Verendra Singh promptly administered CPR,… pic.twitter.com/wSYw3xvWRK
— CISF (@CISFHQrs) September 3, 2025
சிஐஎஸ்எஃப் வெளியிட்ட தகவலின்படி, பயணி முகமது மொக்தார் ஆலம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கயாவுக்குச் செல்ல இருந்த அவர், டெல்லி விமான நிலையத்தின் ப்ரீ-எஸ்ஹெச்ஏ பகுதியில் சரிந்து விழுந்தார்.
இதுபோன்ற சம்பவம் முன்பு ஒருமுறையும் நடந்துள்ளது. கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரியின் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஜோதிர்மய நாயக், புவனேஸ்வரில் இருந்து ஜெய்ப்பூருக்கு (டெல்லி வழியாக) பயணித்தபோது, விமானத்தில் பயணித்த ஒரு வயதான பெண் திடீரென சரிந்து விழுந்தார்.
உடனே டாக்டர் நாயக் உதவிக்கு விரைந்து, சம்பவ இடத்திலேயே சிபிஆர் வழங்கி, விமானம் தரையிறங்கும் முன்பு அவரை நிலைப்படுத்தினார். தரையிறங்கியதும் அந்தப் பெண் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, டாக்டர் நாயக்கின் விரைவான சிந்தனைக்கும், தன்னலமற்ற சேவைக்கும் பாராட்டுகள் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
September 09, 2025 7:14 PM IST
விமான நிலையத்தில் சரிந்து விழுந்த பயணி; உயிரைக் காப்பாற்றிய சிஐஎஸ்எஃப் அதிகாரி… வைரல் வீடியோ