[ad_1]
Last Updated:
பதவியை ராஜினாமா செய்த நேபாள பிரதமர் சர்மா ஒலி தற்போது நேபாளத்தைவிட்டு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் போராட்டம் சமூக வலைதளங்கள் தடை மற்றும் ஊழலுக்கு எதிராகவும் பெரிய அளவில் நடந்து வருகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் போராட்டம் வன்முறையாக மாறியது. அதனைத் தடுக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர்.
போராட்டக்காரர்கள் அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலியின் வீடு, அதிபர் ராம் சந்திர பவுடல் வீடு, நாடாளுமன்றம், அமைச்சர்களின் வீடு உள்ளிட்டவற்றுக்கும் தீவைத்து எரித்துள்ளனர். இரண்டாவது நாளாக இன்றும் அங்கு போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது.
போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து நேபாள பிரதமர், அதிபர், அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இருந்தபோதிலும், அங்கு போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், பதவியை ராஜினாமா செய்த அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலி தற்போது நேபாளத்தைவிட்டு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
September 09, 2025 6:15 PM IST